நாச்சிக்குளம்_TNTJ (கிளை)

இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்2:123)

Monday, March 30, 2009

நாச்சிக்குளம்_TNTJயின் அமீரக வாழ் மக்கள் மாதந்திர அமர்வு

இறைவன் திருப்பெயரால்,
அஸ்ஸலாமு அலைக்கும்,(வரஹ்)
வருகிற ஏப்ரல்(03-04-09)வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு இன்ஷாஅல்லாஹ் ஷார்ஜா JT மர்கஸில் நாச்சிக்குளம்_TNTJயின் அமீரக வாழ் மக்கள் மாதந்திர அமர்வு நடைபெற உள்ளது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்,


யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்2:277)

Saturday, March 21, 2009

கல்பாவில்(UAE)நாச்சிக்குளம்_TNTJயின் ஒருங்கிணைப்பு கூட்டம்

இறைவன் திருப்பெயரால்.

கடந்த வெள்ளிக்கிழமை 20-03-09அன்று ஜும்மாக்கு பிறகு புஜைரா(UAE)கல்பா என்ற ஊரில் நாச்சிக்குளம்(TNTJ)ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் S.ராசிக் அலி(நாச்சிக்குளம்_TNTJ அமீரக ஒருங்கினைப்பாளர்) முன்னிலை வகித்தார்,நாச்சிக்குளம்_TNTJஅமீரக தலைவர் M.K.S. நெய்னா முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஆலோசனை செய்து புதிய கிளை கல்பாவில் தொடங்கி கிழ்கண்ட நபர்களை பொறுப்பாளர்களாக ஒரு மனதாக தேர்ந்தடுக்கபட்டார்கள்
சகோ:S.பரக்கத் அலி(தலைவர்)போன்:00971-559013676.
சகோ:A.சிராஜ்தீன்(செயளாலர்)போன்:00971-559039194.
சகோ:N.தமீம் அன்சாரி(பொருளாலர்)போன்:00971-559605703.
எல்லாம் புகழும் இறைவனுக்கே.அமீரக தலைவர் MKS.நெய்னாமுகம்மது அவர்கள் தவ்ஹித் எழுச்சி பற்றி சிறப்பு உரையாற்றினார்.பிறகு.அமீரக சகோ:S.காமில் (பொருளாலர்) அவர்கள் தர்மம் என்ற தலைப்பில் உரையாற்றினார் மனிதன் எவ்வாறு பொருள் ஈட்டுகிறான் எவ்வாறு செலவு செய்கிறான்.. மிக சிறப்பாக உரையாற்றினார்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆம்விட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி,2, 24, எண் 1419
அடுத்தாக சகோ:A.அரசுதீன் (செயளாலர்) அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றினார். சகோ:S.ராசிக அலி (ஒருங்கிணைப்பாளர்)நன்றியுறை நிகழ்த்தினார்.

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன்2:261)

Monday, March 16, 2009

அமீர வாழ் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

இறைவன் திருப்பெயரால்.

அன்பார்ந்த சகோதரர்களே நாம் அனைவரும் தாய் தந்தை மனைவி மக்கள் என அனைத்து உறவுகளையும் பிரிந்து பொருளாதாரம் ஈட்டுவதற்கு தான் இங்கு (GULF)வ்ந்து இருக்கிறோம்.நமது லட்சிய கனவுகள் நிறைவு அடையும் வரை நேர்மையான வழியில் நமது உழைப்பு இருக்க வேண்டும்.பணத்தை விண் விரயம் செய்யாமல் சேமித்து வைக்கவும்.இளமைக்கு பிறகு முதுமை வரும் போது நாம் யாரிடமும் யாசகம் கேட்காமல் வாழவேண்டும்.அதற்க்கான வழிமுறையில் நாம் தெளிவான திட்டம் இருக்கவேண்டும். குறிப்பாக U.A.E. வாழ் சகோதரர்கள் இந்த நாட்டு சட்டதின் படி வாழவேண்டும்.வெளியே நாம் வெளியே செல்லும் போது Meter taxi அல்லாது வேறு காரில் ஏறக்கூடாது வ்ழி பறி கொள்ளையர்கள் தங்களுடைய (உயிர்) பணம் பறிபோகும் அவலம் இங்கு நடக்கிறது.அறிமுகம் இல்லாத ஆட்களை தங்களுடைய காரில் ஏற்றவேண்டாம் போலிஸ் உங்களை கள்ள Taxi Service செய்கிறீகள் என்று சந்தேகப்பட்டு அபராதமும்.சிறை தண்டணை லைசென்ஸ் பறிபோகும்.
சாலைவிதிகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.Red Signal விழும் போது த்டையை மீறி நடந்து சென்றால் Dh200(AJMAN) அபராதம் செலுத்த வேண்டும் வாகனம் ஓட்டும் போது கைப்பேசிகளை Cell Phone பேசுவதை தவிர்க்கவும் பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம். போக்குவரத்து விதிகளை சரியான முறையில் கடைபிடிக்கவும். பொது இடங்களில் குப்பை போடுவதை தவிர்க்கவும் மீறினால் அபராதம் கட்ட நேரிடும். எந்த லட்சிய கனவோடு நாம் இங்கு வந்து இருக்கின்றோம் அதை எல்லாம் வல்ல இறைவன் நிறைவேற்றி தருவான் என வேண்டியவனாக.

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன்2:168)

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.......