நாச்சிக்குளம்_TNTJ (கிளை)

இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்2:123)

Monday, March 16, 2009

அமீர வாழ் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

இறைவன் திருப்பெயரால்.

அன்பார்ந்த சகோதரர்களே நாம் அனைவரும் தாய் தந்தை மனைவி மக்கள் என அனைத்து உறவுகளையும் பிரிந்து பொருளாதாரம் ஈட்டுவதற்கு தான் இங்கு (GULF)வ்ந்து இருக்கிறோம்.நமது லட்சிய கனவுகள் நிறைவு அடையும் வரை நேர்மையான வழியில் நமது உழைப்பு இருக்க வேண்டும்.பணத்தை விண் விரயம் செய்யாமல் சேமித்து வைக்கவும்.இளமைக்கு பிறகு முதுமை வரும் போது நாம் யாரிடமும் யாசகம் கேட்காமல் வாழவேண்டும்.அதற்க்கான வழிமுறையில் நாம் தெளிவான திட்டம் இருக்கவேண்டும். குறிப்பாக U.A.E. வாழ் சகோதரர்கள் இந்த நாட்டு சட்டதின் படி வாழவேண்டும்.வெளியே நாம் வெளியே செல்லும் போது Meter taxi அல்லாது வேறு காரில் ஏறக்கூடாது வ்ழி பறி கொள்ளையர்கள் தங்களுடைய (உயிர்) பணம் பறிபோகும் அவலம் இங்கு நடக்கிறது.அறிமுகம் இல்லாத ஆட்களை தங்களுடைய காரில் ஏற்றவேண்டாம் போலிஸ் உங்களை கள்ள Taxi Service செய்கிறீகள் என்று சந்தேகப்பட்டு அபராதமும்.சிறை தண்டணை லைசென்ஸ் பறிபோகும்.
சாலைவிதிகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.Red Signal விழும் போது த்டையை மீறி நடந்து சென்றால் Dh200(AJMAN) அபராதம் செலுத்த வேண்டும் வாகனம் ஓட்டும் போது கைப்பேசிகளை Cell Phone பேசுவதை தவிர்க்கவும் பெரும் விபத்துக்களை தவிர்க்கலாம். போக்குவரத்து விதிகளை சரியான முறையில் கடைபிடிக்கவும். பொது இடங்களில் குப்பை போடுவதை தவிர்க்கவும் மீறினால் அபராதம் கட்ட நேரிடும். எந்த லட்சிய கனவோடு நாம் இங்கு வந்து இருக்கின்றோம் அதை எல்லாம் வல்ல இறைவன் நிறைவேற்றி தருவான் என வேண்டியவனாக.

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன்2:168)

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home