நாச்சிக்குளம்_TNTJ (கிளை)

இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்2:123)

Saturday, March 21, 2009

கல்பாவில்(UAE)நாச்சிக்குளம்_TNTJயின் ஒருங்கிணைப்பு கூட்டம்

இறைவன் திருப்பெயரால்.

கடந்த வெள்ளிக்கிழமை 20-03-09அன்று ஜும்மாக்கு பிறகு புஜைரா(UAE)கல்பா என்ற ஊரில் நாச்சிக்குளம்(TNTJ)ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் S.ராசிக் அலி(நாச்சிக்குளம்_TNTJ அமீரக ஒருங்கினைப்பாளர்) முன்னிலை வகித்தார்,நாச்சிக்குளம்_TNTJஅமீரக தலைவர் M.K.S. நெய்னா முகம்மது அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஆலோசனை செய்து புதிய கிளை கல்பாவில் தொடங்கி கிழ்கண்ட நபர்களை பொறுப்பாளர்களாக ஒரு மனதாக தேர்ந்தடுக்கபட்டார்கள்
சகோ:S.பரக்கத் அலி(தலைவர்)போன்:00971-559013676.
சகோ:A.சிராஜ்தீன்(செயளாலர்)போன்:00971-559039194.
சகோ:N.தமீம் அன்சாரி(பொருளாலர்)போன்:00971-559605703.
எல்லாம் புகழும் இறைவனுக்கே.அமீரக தலைவர் MKS.நெய்னாமுகம்மது அவர்கள் தவ்ஹித் எழுச்சி பற்றி சிறப்பு உரையாற்றினார்.பிறகு.அமீரக சகோ:S.காமில் (பொருளாலர்) அவர்கள் தர்மம் என்ற தலைப்பில் உரையாற்றினார் மனிதன் எவ்வாறு பொருள் ஈட்டுகிறான் எவ்வாறு செலவு செய்கிறான்.. மிக சிறப்பாக உரையாற்றினார்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆம்விட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி,2, 24, எண் 1419
அடுத்தாக சகோ:A.அரசுதீன் (செயளாலர்) அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றினார். சகோ:S.ராசிக அலி (ஒருங்கிணைப்பாளர்)நன்றியுறை நிகழ்த்தினார்.

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன்2:261)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home