நாச்சிக்குளம்_TNTJ (கிளை)

இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்2:123)

Wednesday, June 2, 2010

நாச்சிகுளம் கிளை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்ளும், ஊர் ஒற்றுமையும்

31.05.2010 அன்று நாச்சிக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை கூட்டம், கிளை தலைவர் M. அபுபக்கர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு கீ்ழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. திருமண மற்றும் மரண நிகழ்வுகளில் ஊர் ஜமாஅத்துடன் இனங்கி செல்ல இருந்த நிலையில்.. நமது ஜமாஅத்தை சேர்ந்த அமீன் அவர்களுக்கு திருமண கடிதம் கேட்டதற்கு புத்தகம் கொடுக்காதது...

2. யூசுப் ராவுத்தர் அவர்களின் அண்ணன் மரணம் குறித்து பெரிய ஜூம்ஆ பள்ளியில் அறிவிப்பு செய்ய சொன்னதற்கு, அறிவிப்பு கொடுக்காதது...

3. திருமணத்திற்கு கடித புத்தகம் கேட்டால், அவர்களிடம் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என எழுதி கேட்பது...

4. ஃபித்ரா வின் போது, ”யாரும் அவர்களுக்கு கொடுக்க கூடாது” என அறிவிப்பு செய்தது...

5. குர்பானி இறைச்சியை வாங்க கூடாது என கூறியது...

6. பெரிய பள்ளி இமாமுக்கு ”TNTJ-யினர் வீடுகளில் சாப்பாடு வாங்க கூடாது என அறிவித்தது”இது பேன்ற பல சம்பவங்களில் எங்களுக்கு அநீதி இழைத்து... பல திருமணங்களில் ஊரில் குழப்பதையும் ஏற்ப்படுத்தினர்... இது குறித்து ஊர் ஜமாஅத் நிர்வாகம் விளக்கம் அளித்தால் அல்லது மேற்க்கண்டவைகள் அனைத்தும் தவறு என ஒத்துக்கொண்டு.. எழுத்து வடிவில் கொடுத்தால்... இன்ஷா அல்லாஹ்.. திருமணம் பேன்ற வற்றில் கலந்து கொள்ள தயாராக உள்ளது.. தவ்ஹீத் ஜமாஅத்... என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பு : விளக்கமானளும், தவறு என்றாலும் எழுத்து வடிவில் மட்டுமே அமைய வேண்டும்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home