நாச்சிக்குளம்_TNTJ (கிளை)

இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்2:123)

Sunday, May 3, 2009

நாச்சிக்குளம்_TNTJயின் அமீரக மாதாந்திர அமர்வு

இறைவன் திருப்பெயரால்,
நாச்சிக்குளம்_TNTJயின் அமீரக மாதாந்திர அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை சார்ஜா மர்க்கஸில் இனிதே நடைப்பெற்றது, எல்லாப் புகழும் இறைவனுக்கே.நாச்சிக்குளம்_TNTJயின் அமீரக தலைவர் M.K.S.நெய்னா தலைமையில் நடைப்பெற்றது கடந்த மாதம் கோடைக்கால (குர் ஆன் ஹதீஸ்)பயிற்சிக்கு அனுப்புவதாக நமது ஜமாத்தில்(TNTJ) தீர்மானிக்கபட்டு மேலும் 17 பெண்கள் அனுப்பி வைக்கபட்டன.ஆண்களை வருகிற 15தேதியில் இருந்து 25 தேதி வரை நம் தலைமை மூலம் நடைபெறும் கோடை பயிற்சி முகாம்க்கு அனுப்பி வைக்கபட உள்ளன. நாச்சிக்குளம்_TNTJயின் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டுவதற்தக்கான வேலை இன்ஷாஅல்லாஹ் விரைவில் தொடங்க இருக்கிறது மேலும் மாணவர்,மாணவிகளுக்கு குர்ஆன்.பேச்சு.வினாடி வினாக்கள் போட்டிகள் நடைபெறும் விரைவில் போட்டியின் தேதி அறிவிக்கபடும், தாங்கள் பிள்ளைகளை அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பரிசுகள் வழங்கபட உள்ளன நிறைய ஆறுதல் பரிசும் உள்ளது,இன்னும் வரக்கூடிய காலங்கலில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு டியூஷன் சொல்லி கொடுக்க CENTREக்கான ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடக்கிறது.வரக்கூடிய ஆண்டுக்கான கல்விகளுக்கு நோட் புக் மற்றும் இதர உதவி செய்யக்கூடியவர்கள் சகோ:S மும்தாஜ் அலியை(+971-504226482 U.A.E.) தொடர்புக்கொண்டு உங்கள் உதவிகளை தாராளமாக கொடுக்கமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.நாச்சிக்குளம்_TNTJ ஜமாத் நாச்சிக்குளம் ஊர் மக்களுக்கு பாகுபாடு இன்றி முற்றிலும் சேவை செய்ய பாடுபடும்.என்று கூறினார்.வரக்கூடிய காலங்களில் அமீரக மாதந்திர அமர்வுகளில் குர்ஆன் ஒரு வசனத்தை ஓதி விளக்கம் சொல்ல வேண்டும் ஒரு நபர்.மேலும் ஆடுதுறையை சேர்ந்த சகோதரர் மன்சூர் ”மறுமை வெற்றிக்கு என்ன வழி” என்ற தலைப்பில் பயான் மிக சிறப்பாக நடந்தது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல்குர்ஆன்2:286)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home