பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவி (ஜாஸ்மின்)
சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 82.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை அரசுப்பள்ளி மாணவி ஜாஸ்மின் அதிக மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சியடைந்துள்ளார்.மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள் 85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் பெற்றுள்ளார்.4 பேர் இரண்டாம் இடம்:செங்கல்பட்டைச் சேர்ந்த பிரியங்கா, கூடலூரைச் சேர்ந்த நிவேதா, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரசன், கரூரைச் சேர்ந்த சிவப்பிரியா ஆகிய நான்கு பேரும் 494 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.3வது இடம் பிடித்த 10 பேர்:அதே போல மதுரை ஜெயமுருகன், நாகராஜன், புளியங்குடி ரம்யா, நெல்லை ஜெயலின், நாமக்கல் இந்துஜா, கரூர் ராஜ்சூர்யா, பரமக்குடி பிரதீப்குமார், திலகவதி, செய்யாறு செந்தில்குமார், புதுச்சேரி ரேவதி ஆகிய 10 பேரும் 493 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.கணிதப் பாடத்தில் இந்த ஆண்டு 2,399 பேர் தான் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதத்தில் 5,112 பேர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.மெட்ரிக் தேர்வு-பவித்ரா முதலிடம்:மெட்ரிக் தேர்வில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்ரா 495 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஸ்ரீவந்தனா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்ரேயா அகர்வால் ஆகியோர் 493 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர்.எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவைக் காண மெட்ரிக் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 6,493 பள்ளிகளைச் சேர்ந்த 8,56,966 மாணவ, மாணவிகள் எழுதினர் என்பது குறி்ப்பிடத்தக்கது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தனித் தேர்வர்களும் எழுதினர்.எஸ்எஸ்எல்சி தவிர, ஓ.எஸ்.எல்.சி, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன் தேர்வு முடிவுகளும் இன்று வெளியாகியுள்ளன.